சீனாவை மிரட்டிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் அரசு தீவிர கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளா தலைநகர் டெல்லி தமிழகம் என மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது.
60க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்தியாவில் முதல் உயிரிழப்பு அரங்கேறியுள்ளதாக தகவல் எழுந்தது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் , கேரளாவில் 8 . இராஜஸ்தான் ,ல் டெல்லியில் தலா ஒருவருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.