தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜா தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்துவரும் நிலையில், தற்போது சல்மான்கான் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் சல்மான் கானுடன் இணைந்து பூஜா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை பூஜா மற்றும் சல்மான்கான் அதிக அளவில் நெருக்கம் காட்டுவதாகவும், இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்வதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. நடிகர் சல்மான் கானுக்கு தற்போது 56 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். மேலும் நடிகை பூஜாவுக்கு தற்போது 32 வயது ஆகும் நிலையில் சல்மான் மற்றும் பூஜா காதலித்து வருவதாக பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.