அமைச்சர் ஆனாலும் உதயநிதி பிளேபாய்தான் என்று BJP தலைவர் அண்ணாமலை மறைமுகமாக தாக்கியுள்ளார். திமுகவில் பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அவருக்கு 80 வயது ஆனாலும், பிளே பாயாகத்தான் இருப்பாரே தவிர, மக்கள் மீது அக்கறை காட்டும் நபராக இருக்கமாட்டார். திமுகவுக்கு எப்போதுமே பின் கேட்டில் வந்து தான் பழக்கம். நிறுத்தி வைத்திருந்த அரசாணையை மக்கள் சோர்வடைந்திருந்த போது கையெழுத்து போட்டுள்ளனர்.
80 படம் 8000 கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் உதயநிதி பிளேபாயாக தான் இருப்பார். காக்கி உடை போட தகுதி வேண்டும். ப்ரொடக்ஷன் கம்பெனி வைத்து காக்கி உடை போட்டு திரையில் தான் நடிக்க முடியும் என்று கோவையில் தொழில் பூங்கா அமைக்க அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசினார்.