தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது.
இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்திருந்தார் இந்த நிலையில் நடிகை அஞ்சலி, நடிகர் ஜெய்யை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் சமீப காலமாக செய்திகள் வெளியாகி வந்தது. இதுகுறித்து பேசிய அஞ்சலி, நான் ஜெய்யை காதலிக்கிறேன் என எப்போதும் சொன்னது கிடையாது. எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து ஏதாவது எழுதுவதே சிலருக்கு வேலையாக இருக்கிறது. அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை என கூறியுள்ளார்.