Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பாஜக தலைமையகத்தில் ஜோதிராதித்ய சிந்தியா …!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய அலுவலகம் வந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவும் நேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அதோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை  அனுப்பி வைத்தார்.

அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிக்கை வெளியிட்டது. இதனால் அவர் பாஜகவில் விரைவில் இணைவார் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது பாஜக அலுவலகத்துக்கு ஜோதிராதித்ய சிந்தியா வந்துள்ளார்.

Categories

Tech |