Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. 5 வருடத்தில் 2,49,914 பேருக்கு மத்திய அரசு பணிகள்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நமது நாட்டின் வேலை வாய்ப்பு  குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு  நாட்டில் உள்ள அனைத்து துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேபோல் இன்று நமது இந்தியாவின் வேலை வாய்ப்பு மற்றும் மத்திய அரசு பணியாளர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியதாவது, “கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் இதுவரை மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 919 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காலியாக உள்ள அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |