Categories
மாநில செய்திகள்

காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்…. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு…..!!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்கு காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்த  அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  மீட்பு படையினரோடும், தன்னார்வலர்களோடும் இணைந்து காவல்துறை செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |