தீவிர புயல் மாண்டஸ் சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையை அடுத்து 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவில் அரசு பேருந்துகள் சேவை இயங்காது என்றும், மக்கள் வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.