அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் அண்ணாசாலையில் சென்ற போது அவர் கார் முன்பாக சென்ற அரசுப் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி பயணம் செய்தார்கள். இதை பார்த்த ஆட்சியர் பேருந்தை முந்தி சென்று வழிமறித்தார். இதனால் மாணவர்கள் உடனடியாக பேருந்தின் உள்ளே சென்றார்கள்.
இதன்பின் ஆட்சியர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அழைத்து இது போன்ற ஆபத்தான பயணத்தை அனுமதிக்க கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும் படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் இரண்டு பேரை அழைத்து ஆபத்தான முறையில் பயணம் செய்யக் கூடாது எனவும் பேருந்தில் இடமில்லை என்றால் அடுத்த பேருந்தில் சொல்ல வேண்டும் எனவும் பேருந்தின் உள்ளே பாதுகாப்பான முறையில் தான் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.