திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மகனுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படாது என்று கூறிய நிலையில் இளைஞர் அணி செயலாளர் பதவியை வழங்கினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாகவும் இருக்கும் நிலையில், அமைச்சரவையில் ஏற்கனவே 4 எம்எல்ஏக்கள் அமைச்சராக இருப்பதால் உதயநிதிக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என மூத்த அமைச்சர்கள் பலர் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு டிசம்பர் 16-ம் தேதி அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி உதயநிதிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறையை ஒதுக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் உள்ள அறிவாலயத்தில் வைத்து உதயநிதிக்கு முடி சூட்டும் விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு மைதானங்களை திறப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும், இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.