தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை காவல்நிலையம் அருகே உள்ள வரதப்பன்தெருவில் வசித்து வந்தவர்கள் பாண்டியம்மாள். அவரது மகள் நிவேதா.
இரண்டு பேரும் இன்று வீட்டிலேயே நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த நிவேதா தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பற்றிய தீ அருகில் உள்ள குடிசைகளுக்கு பரவியது.