தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் நடிப்பில் தற்போது பகாசூரன் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் செல்வராகவன் தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் எத்தனையோ நாள் நாம் நிம்மதியாக இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை நாம் பெரிதாய் பொருட்படுத்தவில்லை. என்றாவது ஒருநாள் பிரச்சனை வந்துவிட்டால் அய்யோ அம்மா கடவுளே காப்பாற்று என்றுதான் சொல்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கஷ்டத்தில் தான் கடவுள் ஞாபகம் வருகிறதா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் “ ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து“ தான் .
— selvaraghavan (@selvaraghavan) December 8, 2022