எலான் மஸ்க் 150 கோடி ட்விட்டர் கணக்குகளை விரைவில் நீக்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலகின் இரண்டாம் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக வாங்கிய பின், மேல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது, நிர்வாக குழுவை மொத்தமாக கலைத்தது, அதிகாரப்பூர்வ புளூ டிக் கணக்கிற்கு கட்டணம் அறிவித்தது என்று தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் விரைவாக சுமார் 150 கோடி twitter கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். அதாவது பல ஆண்டுகளாக ட்விட்டருக்குள் செல்லாமல், ட்விட் போடாமல் இருக்கும் 150 கோடி கணக்குகள் நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.