Categories
மாநில செய்திகள்

நெருங்கி வரும் மாண்டஸ்..! சென்னைக்கு 260 கி.மீட்டர் தொலைவில் மையம்.!!

சென்னைக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வட மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடமேற்கு திசையில் மேலும் அது நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஸ்ரீஹரிகோட்டா இடையே  மாமல்லபுரம் அருகே அது கரையை கடக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை இந்த புயலானது கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்திலும் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கன மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |