Categories
மாநில செய்திகள்

#BREAKING : தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது.!!

தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது..

இந்நிலையில் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,  மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |