உலகை அச்சுறுத்தும் கொரோனா மக்களின் உயிர்களை காவுவாங்கியது, அதோட மட்டும் விட்டுவிடாமல் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் உகான் நகரிலிருந்து எரிமலைபோல் எழுந்த கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் மேலும் 90 நாடுகளில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகையே அச்சுறுத்தும் இந்த கொரோனா உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 148 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் என ஐ.நா.வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கணித்து கூறியுள்ளது. மனித இழப்புகளையும் தாண்டி, பொருளாதார நிச்சயமற்ற நிலைமையால், 1 லட்சம் கோடி டாலர் இந்த ஆண்டில் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.