ஆயிஷாவுக்கு எதிராக பிக் பாஸ் ஏற்பாட்டாளர்களே இப்படி செய்யலாமா என பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.
பிக்பாஸ் சீசன்6 தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் சினிமா பிரபலங்கள் போல நடிக்க வைக்கப்பட்டது. அப்போது ரச்சிதா சரோஜா தேவி கதாபாத்திரமாகவும் தனலட்சுமி நேசமணியாகவும் மைனா நாய் சேகராகவும் ஆயிஷா சிம்புவாகவும் நடித்தார்கள். இதில் ஆயிஷா தனது மேனரிசம், பேச்சு, டான்ஸ் என அனைத்திலும் சிம்பு போலவே செய்து காட்டி ஆடியன்ஸின் பாராட்டுகளை பெற்றார். அவருக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்த போதும் அவரை பிக்பாஸ் வேண்டும் என்றே ஒதுக்குவதாக பார்வையாளர்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றார்கள்.
ஆயிஷாவின் உடை தாமதமாக வந்தது, அவர் டான்ஸ் பெர்பார்மன்ஸ் காட்ட வில்லை, எதையும் டிவியில் காட்டவில்லை, அவரின் பர்பாமென்ஸ் மூன்று நிமிடம் கூட இல்லை என்கின்றார்கள் ஆடியன்ஸ். ஆயிஷாவை வெளியேற்றுவது என பிக்பாஸ் ஏற்பாட்டாலர்கள் முடிவு செய்துவிட்டதால் அவரின் பர்பாமென்ஸை ஒளிபரப்பாமல் இப்படி செய்கின்றார்கள். ஹவுஸ்மேட்ஸ் தான் பாரபட்சம் பார்க்கின்றார்கள் என்றால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அதையே செய்கின்றார்கள் என ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றார்கள்.