கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா, பறவைக் காய்ச்சலைத் தொடர்ந்து தற்போது குரங்கு காய்ச்சல் தாக்கமும் கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கு காய்ச்சல் காரணமாக வயநாட்டில் உள்ள மனந்தவாடியில் உள்ள நாரங்கக்குன்னு காலனியைச் சேர்ந்த மீனாட்சி (48) என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.
குரங்கு காய்ச்சல் தொற்று காரணமாக வயநாட்டில் பதிவான முதல் மரணம் இதுவாகும். இந்நிலையில் மேலும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ அலுவலர் ஆர்.ரேணுகா தெரிவித்தார்.
பறவைக் காய்ச்சல் தாக்கம் காரணமாக கேரளாவில் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.