Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டிலிருந்தே ஈஸியா பான் கார்டு பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ அதற்கான வழிமுறைகள்….!!!!!

நாட்டில் ஆதார் கார்டு போன்று பான் கார்டும் முக்கியமானதாக உள்ளது. வங்கிக் கணக்குகளை திறப்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு பான்கார்டு முதன்மையானதாக பயன்படுகிறது. பான் கார்டு வாயிலாக வருமான வரித் துறை மக்களின் நிதி விவரங்களை கண்காணிக்கிறது. அதுமட்டுமின்றி பான்கார்டு பல அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுவதால் இதனை மக்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். டிஜிட்டல் பான் கார்டை சில மணி நேரங்களில் பெற பினோ பேமெண்ட்ஸ் வங்கி புது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இச்சேவைக்கு உங்களது ஆதார் விபரங்கள் மட்டுமே தேவைப்படும். உங்களது ஆதார் அங்கீகாரத்துக்குப் பின் எந்தவொரு பயனாளரும் பினோ வங்கி மையங்களின் உதவியுடன் அவர்களுக்கான பான்கார்டைப் பெறலாம். ஆதார் அட்டையை தவிர்த்து எந்த வித கூடுதல் ஆவணங்களும் இந்த செயல்முறைக்கு தேவைப்படாது. கூடுதலாக, நுகர்வோருக்கு பிஸிக்கல் மற்றும் டிஜிட்டல் பான்கார்டுக்கு இடையில் விருப்பம் வழங்கப்படும். டிஜிட்டல் பான்கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த சில மணி நேரங்களுக்குள் தனி நபர்களின் மின் அஞ்சல் முகவரிகளுக்கு அவர்களின் டிஜிட்டல் பான்கார்டு (அ) இ-பான் அட்டையுடன்கூடிய மின்னஞ்சல் அனுப்பப்படும் என பினோ வங்கி தெரிவித்துள்ளது.

இதில் டிஜிட்டல் பான் கார்டுகள் உலகம் முழுவதும் செல்லுபடியாகும். அத்துடன் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ நோக்கத்துக்கும் இதை பயன்படுத்தப்படலாம். இதனால் இது தொடர்பாக மக்கள் எந்த வித கலக்கமும் தேவையில்லை. எனினும் டிஜிட்டல் முறையில் பான்கார்டு பெற விரும்பாமல் பேப்பர் பான்கார்டு பெற விரும்பும் மக்களுக்கும் பினோ வங்கி அதற்கான சேவையை வழங்குகிறது மற்றும் ஆதாரிலுள்ள உங்களது முகவரிக்கு 4 -5 நாட்களில் பான்கார்டு டெலிவரி செய்யப்படும்.

Categories

Tech |