செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியதாவது , திமுக_வின் முதல் டார்கெட் தற்போது நான்தான் என்று கூறினார். மேலும் பேசிய அவர் என் மீதான வழக்கு 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது, அது பற்றி தவறான தகவல்களை ஸ்டாலின் மூலம் கசிய விடுகின்றனர்.
என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப தயாராக உள்ளனர் என கேள்விப்படுகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் வேண்டுமானாலும் கூறட்டும் , ஆனால் பத்திரிக்கை , நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம். ஆர் எஸ் பாரதி அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எஸ் பி வேலுமணி பேட்டியளித்தார்.