Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில் மின் இணைப்பு துண்டிப்பு… விவசாயிகள் எதிர்ப்பு.. பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்..!!!

பொள்ளாச்சியில் பி.ஏ.பி கால்வாய் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் மின் இணைப்பு துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் பி.ஏ.பி பிரதான கால்வாயில் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் மின் இணைப்பை துண்டிப்பதை நிறுத்த வேண்டும். காற்றாலையாகவும் தொழிற்சாலையாகவும் மாறி இருக்கும் நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை தாங்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் இதில் எம்எல்ஏ கந்தசாமி கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க கதிரேசன் என பலர் பங்கேற்றார்கள்.

Categories

Tech |