விழித்தெழு திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
இயக்குனர் தமிழ்செல்வன் இயக்கும் விழித்தெழு திரைப்படத்தை ஆதவன் சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படம் சமூக வலைதள மோசடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஹீரோவாக முருகா அசோக் நடிக்க ஹீரோயினாக காயத்ரி ரெமோ நடித்திருக்கின்றார்.
மேலும் இந்த படத்தில் சுஜாதா, சரவணன், சக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சுப்பிரமணியபுரம் தனம், திருக்குறளி, காந்தராஜ், ஆதவன், கார்த்திக் என பலர் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்திற்கு நல்ல தம்பி இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றது.