தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் விருப்பமுள்ளவர்கள் பதிவேற்றம் செய்யலாம்.
அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர், சென்னை மாவட்ட பிரிவு, செனாய்நகர், சென்னை 600030 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய 7401703480 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.