Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களிடம் ஜாதி, மதம் மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ளிட்ட 13 தகவல்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களிடம் 13 வகையான தகவல்களை சேகரிக்க வேண்டும்.

அதாவது மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், பெற்றோரின் ஆண்டு வருமானம், ஜாதி மதம் உள்ளிட்ட தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெறப்பட வேண்டும். அதேசமயம் மாணவர் அல்லது பெற்றோரின் மொபைல் எண் பாடத்தொகுப்பு பயிற்று மொழி வீட்டு முகவரி ஆகிய தகவல்களையும் பெற்று பள்ளிக் கல்வித் துறையின் எமிஸ் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |