Categories
மாநில செய்திகள்

மின்விநியோகம் மீண்டும் எப்போது…? அமைச்சர் விளக்கம்…!!!

மாண்டஸ் புயலின் போது சூறைக்காற்று வீசியதால் ஒருசில பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 11 ஆயிரம் மின்சார ஊழியர்கள் களத்தில் தயாராக உள்ளதாககவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கம்பங்கள் சாய்ந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம்.

நேற்று இரவு முதல் சென்னையில் 11,000 பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், இன்று பிற்பகலுக்குள் அனைத்து இடங்களிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் என கூறினார். பொதுமக்கள் நலன் கருதியே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

Categories

Tech |