விஜய் டிவியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் 6-வது சீசன் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். அதாவது, ஜிபி முத்து, ஷாந்தி, அசல் கோளார், ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி என 8 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். இவர்களை அடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எனினும் வழக்கம்போல ஒரு எவிக்ஷன் மட்டும் இன்றி இந்த வாரம் டபுள் எவிக்ஷன் உள்ளது என்று தகவல் வெளியாகியது. அந்த வகையில் ஆயிஷா மற்றும் ராம் இரண்டு பேரும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என தெரியவந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட அயீஷா மற்றும் ராம் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் என்ன நடக்க போகிறது என காத்திருந்து பார்ப்போம்.