பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவும் நேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசி , காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோதிராதித்ய சிந்தியா டெல்லி பாஜக தலைமையகத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில் தன்னை பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொண்டடார்.
இதையடுத்து இவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டு , மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஜோதிராதித்ய சிந்தியா பாஜக சார்பில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.