பட்டுக்கோட்டை ஊராட்சியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன், சாமிநாதன், உதவி என்ஜினியர் சத்திய பாமா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை அடுத்து கூடுதல் ஆட்சியர் பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.