நீங்கள் பெறும் சம்பளம் வருமான வரி வரம்பை விட குறைவாக இருந்தாலும்கூட வருமான வரி தாக்கல் செய்வதன் வாயிலாக பல நன்மைகள் கிடைக்கும். தற்போது ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காண்போம். பொதுவாக கடன் வாங்குகிறீர்கள் எனில் உங்களது வருமானத்தின் அடிப்படையில் தான் உங்களுக்கு வங்கிகள் கடனை வழங்கும். இதற்கிடையில் வருமான வரிக்கணக்கில் தாக்கல் செய்த வருமானத்தினை பொறுத்தே வங்கிகள் கடனை வழங்குகிறது.
ஆனால் ஐடிஆர் தாக்கல் செய்வதன் வாயிலாக கடன் செயல்முறை ஈஸியாகிறது. அதன்பின் வங்கிகள் கடன் செயலாக்கத்தின் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 3 ஐடிஆர்களை கேட்கிறது. வீட்டுக்கடன் வாங்க (அ) கார் கடன் வாங்க (அ) தனி நபர் கடன் வாங்க விரும்பினால் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் ஐடிஆர் தாக்கல் செய்யவும். இதையடுத்து நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்தால் டெர்ம் டெபாசிட்கள் உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களில் கிடைக்கும் வட்டிக்கு வரியை சேமிக்கலாம். மேலும் டிவைடென்ட் வருமானத்திலும் வரியை சேமித்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி ஐடிஆர் ரீஃபண்ட் வாயிலாகவும் வரியைப் பெறலாம். மொத்த வருமானம் ரூபாய்.2.5 லட்சத்திற்கு மேல் இருப்பின் டிடிஎஸ்ஸை நீங்கள் மீண்டும் கோரலாம். ஏராளமான நாடுகள் ஐடிஆர் கோருகிறது. அதுபோன்ற நாடுகளுக்கு நீங்கள் போகிறீர்கள் எனில் ஐடிஆர் தாக்கல் செய்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். அத்துடன் இது உங்கள் தற்போதைய நிதிநிலைமை மற்றும் வருமானம் குறித்த தெளிவான யோசனையை விசா செயலாக்க அதிகாரிகளுக்கு வழங்குகிறது. இது உங்களுக்கு ஈஸியாக விசா கிடைக்கவும் வழிவகை செய்கிறது.