நம் நாட்டில் கடந்த 2014ம் வருடத்திலிருந்து இதுவரையிலும் பசியால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலமேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார். 2014ம் ஆண்டில் இருந்து பசியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை பற்றி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானி இவ்வாறு தெரிவுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது “சா்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பது உண்மை நிலையைக் காட்டவில்லை. ஏனெனில் அது நிறைய குறைபாடுள்ள ஓா் அளவீடு ஆகும். அதனை கொண்டு இந்தியாவில் நிலவும் பசியை கணக்கிடக்கூடாது. ஆகவே 2014 ஆண்டில் இருந்து இந்தியாவின் எந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பசியால் ஒருவரும் உயிரிழக்கவில்லை” என தெரிவித்தாா்.