Categories
தேசிய செய்திகள்

இந்திய ஆக்கி வீரர் மீது கொலை வழக்கு பதிவு… பணியில் காலம் தாழ்த்தியது ஏன்…? கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேந்திர லெஹ்ரா(32) ஒடிசா காவல்துறையில் டி.எஸ்.பி-யாக பணியாற்றியுள்ளார். இவரது நண்பன் ஆனந்த் டாப்போ(28). ஆனந்த் டாப்போ புவனேஸ்வர் மாவட்டம் இன்போசிட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி 10 நாட்கள் ஆன நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரேந்திர லெஹ்ரா வீட்டில் ஆனந்த் டாப்போ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தன்னுடைய மகனை பிரேந்திர லெஹ்ரா மற்றும் அவரது பெண் தோழி மஞ்சத் டி.டி-யுடன் சேர்ந்து கொலை செய்து விட்டதாக ஆனந்தின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தன் மகனுடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதால் பிரேந்திர லெஹ்ரா மீது நடவடிக்கை எடுக்கும்படி இன்போசிட்டி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இன்போசிட்டி போலீசார் பல மாதங்கள் தாண்டியும் பிரேந்திர லெஹ்ரா மீது எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. இதனையடுத்து ஆனந்தின் தந்தை இன்போ சிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பந்தனா ஒடிசா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை ஒடிசா ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்தது. அதன் பின் பல மாதத்திற்கு பின் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி ஆனந்த் மரண வழக்கு தொடர்பாக பிரேந்திர லெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது ஆனந்த் மரணத்தில் பிரேந்திர லெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்திய இன்போசிட்டி  போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு வருடத்திற்கு எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்போசிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு மாத பயிற்சி வகுப்பிற்கு செல்ல வேண்டும் எனவும் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை புவனேஸ்வர் துணை கமிஷனர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் எனவும் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |