நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் சூர்யா, விஜய் மற்றும் தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவர் உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக இருக்கிறார். நடிகை சினேகா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் கத்திரி ப்ளூ உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.