கிரெடிட்கார்டு வைத்திருப்போர் விரைவில் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (UPI) வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த இயலும். இப்போது UPI பயனர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் வாயிலாக மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். கிரெடிட் கார்டுகள் வாயிலாக UPI செலுத்துதல்களை Razorpay Payments Gateway-ஐ பயன்படுத்தும் வணிகர்களிடம் மட்டுமே செய்ய இயலும்.
இதன் வாயிலாக அதன் தளம் UPIல் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை செயல்படுத்தும். தற்போது UPIல் RuPay கிரெடிட் கார்டுகள் இயக்கப்பட்டு இருப்பதால், Razorpay வணிகர்கள் UPIல் கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளை இப்போதுள்ள அமைப்பில் குறைந்தபட்ச மாற்றங்களுடன் ஏற்கத் துவங்கலாம் என Razorpay தெரிவித்து உள்ளது.