ஹன்சிகா தன் கணவருக்கு இனிப்பு சமைத்து பரிமாறிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை சென்ற டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் ஹன்சிகா தனது காதல் கணவருக்கு குடும்ப சம்பிரதாயப்படி அவர் கையாலயே இனிப்பு சமைத்து பரிமாறிய புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.