Categories
நாமக்கல் மாநில செய்திகள்

கோழிக்கறி ரூ 28க்கு விற்பனை… நாமக்கல்லில் கடும் சரிவு ….!!

கொரோனா , பறவைக்காய்ச்சலை தொடர்ந்து கோழிக்கறி விலை கடும் சரிவை கண்டது.

உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கேரளாவுக்கு அண்டை மாநிலமான தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.கேரளாவில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. அங்குள்ள கோழிக்கூடு மாவட்டத்தில் மட்டும் 20,000 கோழிகள் அளிக்கப்பட்டது.

அதோடு கொரோனா கோழி மூலமாகவும் பரவுகின்றது என்ற வதந்தியும் காட்டுத்தீயை பரவியதை தொடர்ந்து கோழி இறைச்சி , முட்டை விலை கடுமையாக பாதித்தது. கொரோனா வைரசுக்கு , கோழிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அமைச்சர் தெளிவு படுத்தியும் கோழிக்கறி விலை கடுமையாக சரிந்துள்ளது.

நாமக்கல் உயிருடன் கறிக்கோழி விலை ஒன்றுக்கு 37 இலிருந்து மேலும் சரிந்து 28 விற்பனை செய்யப்படுகிறது . இதனால் கோழி பண்ணை நடத்துபவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

Categories

Tech |