Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையை கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் தற்போது புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆம்பூருக்கும் திருப்பத்தூருக்கும் இடையே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனால் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |