பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க ன் தமன் இசை அமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போதிருந்தே மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் பேனர் சென்னையில் உள்ள பல பிரபலமான திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மாண்டஸ் புயலின் காரணமாக பெய்த கனமழையால் வாரிசு பேனர்கள் அனைத்தும் கிழிந்து தொங்கியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.