Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறிய முக்கிய பிரபலம்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என கடந்த வாரமே கமல்ஹாசன் அறிவித்துவிட்ட நிலையில் இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த இரண்டு பேர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வாரம் சனிக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு ராம் வெளியேறி விட்டதாகவும் நாளை ஆயிஷா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |