மனைவி , தாய் , குழந்தைகளை கொலை செய்த குற்றவாளியை தூக்கில் போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்லாவரத்தையடுத்துள்ள பம்மல் கிருஷ்ணாநகர் நந்தனார் தெருவைச் சேர்ந்த தம்பதி தாமோதரன் – தீபா . இவர்களுக்கு மீனாட்சி என்ற மகளும் , ரோஹன் என்ற மகனும் இருந்தனர். இவர்களோடு தாமோதரனின் தாய் சரஸ்வதியும் வசித்து வந்தார். தாமோதரன் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில் ஏற்பட்ட நஷ்டம் , கடன் சுமை ஆகியவற்றால் விரக்தியில் இருந்த தாமோதரன் தாய், மனைவி, குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து போலீஸ் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் நடைபெற்று வந்தது. பலகட்டங்களாக விசாரணைகளை கடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது. அதில் குற்றவாளி தாமோதரனை சாகும்வரை தூக்கில் போடுமாறு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.