Categories
தேசிய செய்திகள்

முப்படை தலைமை தளபதி முதலாம் ஆண்டு நினைவு தினம்… “சீனாவுடன் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலை “…. அஜித் தோவல் பேச்சு…!!!!

கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 8-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பிபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசிய போது, “2017 – ஆம் வருடம் டோக்ளாண்ட் எல்லையில் சீனாவுடன் நமக்கு கடுமையான சூழ்நிலை ஏற்பட்டது எனக்கு நினைவுள்ளது. ஜெனரல் பிவின் ராவத் அந்த சமயத்தில் என்னுடைய வீட்டில் இரவு 9 மணி 9:30 மணி அளவில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவார். அப்போது நாங்கள் அனைவரும் ஆலோசனைகளை மேற்கொள்வோம். பிபின் ராவத் மிகவும் நெஞ்சுரம் மிக்கவர். மேலும் முடிவெடுப்பதில் ஒருபோதும் தயக்கம் காட்டமாட்டார். இந்திய ராணுவம் தொலைநோக்கு பார்வை கொண்ட யுக்திகளை  சிந்திக்க கூடிய நபரை இழந்துவிட்டது. மேலும் அவரது இழப்பு அனைவருக்குமான தனிப்பட்ட இழப்பு” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |