விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் கடுமையாக உழைத்து தான் மேற்கொள்ள வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஓரளவு சிறப்பானதாக இருக்கும். வருமானம் இன்று ஓரளவு நல்ல படியாகவே வந்து சேரும். கவலை வேண்டாம். பெண்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாகவே பேசவேண்டும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் தேவை உள்ளது மட்டும் பேசுங்கள். அதேபோல தேவையில்லாத பொருட்களை தயவு செய்து வாங்க வேண்டாம். சிக்கனத்தை இன்று நீங்கள் மிகவும் கடைபிடிக்கவேண்டும்.
பிள்ளைகள் மீது அக்கறை கொள்ள வேண்டும். பிள்ளைகளால் பெருமை இன்று ஏற்படும் திடீரென்று கோபம் கொஞ்சம் தலைதூக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரிடும், கவனம் இருக்கட்டும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். வெளியூர் வெளிநாடு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். ஓரளவு இன்று சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். மனதை எப்பொழுதும் போலவே அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
மாணவக் கண்மணிகள் அலட்சியம் காட்டாமல் பாடங்களை படிப்பது நல்லது. தேர்வு முடியும் வரை பாடங்களை கவனமாக படியுங்கள் படத்தை பாருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த நிறமாகவே அமையும். அது மட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்