Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..முன்யோசனையுடன் செயல்படுங்கள்.. ரகசியங்களை யாரிடமும் கூறாதீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே.! இன்று முன்யோசனையுடன் செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் நவீன மாற்றம் தேவைப்படும். சுமாரான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். உடல்நலத்திற்கு சீரான ஓய்வு ரொம்ப அவசியம். இன்று கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்கள் வகையில் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகள் இன்று  நீங்கள் சந்திக்கக்கூடும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

ஆகையால் நிதானமாக செய்யுங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்யுங்கள். இன்று  உங்களுடைய நிதி மேலாண்மை சீராக இருக்கும். பொறுப்புகளை உணர்ந்து கொண்டு காரியங்களில் ஈடு படுங்கள். ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அது மட்டுமில்லாமல் தேர்வில் நல்ல முன்னேற்றம் பெற கூடிய சூழல் அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் கருநீல நிறம்

Categories

Tech |