Categories
அரசியல் மாநில செய்திகள்

“காவிரி நதி நீர் பிரச்சனை, மொழி பிரச்சனை”…. வாய்ப்பு கொடுத்தா நாங்க தீர்த்து வைப்போம்…. பாஜக அண்ணாமலை உறுதி….!!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில் தமிழக உரையாடல்கள்-2022 தமிழகம்-கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, பொதுவாக அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது. பாஜக தேசிய கட்சி என்பதால் தமிழகத்தில் ஒரு கிளை இருந்து விட்டு போகட்டும் என்பதற்காக பாஜக தொடங்கப்படவில்லை.

தமிழகத்தில் பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்பது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இந்த கேள்வி களுக்கான பதிலை மக்களுக்கு புரிய வைத்தால் கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது. மற்ற மாநிலங்களில் சென்று பாஜக ஆட்சியைப் பார்த்தால் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஏமாற்று வேலை மக்களுக்கு புரியும்.

மக்களின் நலனுக்காக ஓடிக் கொண்டிருக்கிற ஒரே கட்சி பாஜக. திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்தில் சாதி பிரச்சனை ஒழியவில்லை. நீண்ட காலமாக இருக்கும் காவிரி நதி நீர் பிரச்சனை மற்றும் மொழி பிரச்சனை போன்றவற்றை வைத்து திராவிட கட்சிகள் அரசியல் செய்கிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கக்கூடிய வல்லமை பாஜகவிடம் இருக்கிறது. தாய் மொழிகளின் பாதுகாவலனாக பிரதமர் மோடி இருக்கிறார். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுக்கும் என்று கூறினார்.

Categories

Tech |