Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…நண்பரின் ஆலோசனை உதவும்.. அதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே.! இன்று முக்கிய செயல் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகலாம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பரின் ஆலோசனை உதவும். குறைந்த அளவில் வருமானம் கிடைக்கும். உறவினர் வருகை தருவார்கள். தியானம் தெய்வ, வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகும். இன்று உயர் அதிகாரிகளின் பாராட்டு தக்க மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகள் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்..

எதிர்பாராத உதவிகள் பெறுவதால் பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாக உங்களுக்கு அடைபடும். இன்று மனம் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படும், முடிந்தால் இன்று  திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். மாணவச் செல்வங்கள் பொறுமையாக இருந்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை அதுபோலவே எழுதிப் பாருங்கள் உங்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இருந்தாலும் தேர்வு முடியும் வரை கொஞ்சம் கவனமாகவே பாடங்களைப் படியுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |