கம்மியான பட்ஜெட்டில் தயாராகி சென்ற மாதம் திரைக்கு வந்த “லவ் டுடே” திரைப்படம் பன்மடங்கு வசூல் குவித்து திரை உலகினரை வியப்பில் ஆழ்த்தியது. சுமார் ரூபாய்.4 கோடி பட்ஜெட்டில் தயாராகிய இந்த திரைப்படம் ரூபாய்.70 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் ஓடிடி உரிமை வாயிலாகவும் பெரிய தொகை வந்திருக்கிறது. மேலும் தெலுங்கில் இந்த படத்தை வெளியிட்டும் அதிக லாபம் பார்த்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருந்தார். தற்போது “லவ் டுடே” திரைப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்யவுள்ளனர். இதில் இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவான் பெயர் அடிபடுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. முன்பே தமிழில் வெற்றி பெற்ற பல்வேறு படங்கள் இந்தியில் ரீமேக்காகி உள்ளன. இதற்கிடையில் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படமும் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.