Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு.. திட்டமிட்ட செயல்கள் சிறப்பாக அமையும்.. ஆதாயம் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உங்கள் கையில் வந்து சேரும். திட்டமிட்ட செயல்கள் அனைத்துமே சிறப்புடன் நிறைவேறும். இன்று ஆர்வம்  உங்களுக்கு பல தொழில்களில் ஏற்படும். தொழில் வியாபாரம் வளர்ச்சியாக ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். கொஞ்சம் ஆரோக்கியம் பலம் பெறும், திடீரென்று கோபம் மட்டும் தலைதூக்கும் ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சை கேட்க நேரலாம், கவனம் இருக்கட்டும்.

உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியை கொடுக்கும். வெளிநாடு வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். அதன் மூலம் உங்களுக்கு முக்கியமான பணி ஒன்று நிறைவேறும். இன்று விருப்பங்கள் ஓரளவு கைகொடுக்கும் நாளாகவே இருக்கும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள்.

இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாடு மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடைபெறும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |