Categories
உலக செய்திகள்

அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீர் குண்டு வெடிப்பு… 3 பேர் பலி: பலர் மாயம்…. பெரும் சோகம்…!!!!!!

அடுக்குமாடு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பில்  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்சில் அமைந்துள்ள ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் அதிகாரி ராபின் ஸ்மித் பேசியதாவது, குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 20 முதல் 30 பேர் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது கட்டிடத்தின் வழியே நடந்து சென்றவர்களில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. இது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |