உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மின் நிலையங்கள் மீது நடத்தி வரும் போரால் உக்ரைனில் நீண்ட நேர மின்தடைகள் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள ஒடேசா நகரின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அரசு கூறியதாவது, ஒடேசா நகரத்தின் மின் கட்டமைப்புகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. மேலும் அந்த நகரம் முழுவதும் தற்போது இருளில் மூழ்கியுள்ளது. அதேசமயம் உக்ரைனின் பாதுகாப்பு படையினர் ரஷ்யாவின் இரண்டு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.