கேரளா கொல்லம் மாவட்டம் பரக்குளத்தில் சென்ற 5ஆம் தேதி கிரீஷ்மா – ஜெய்ஷங்கர் ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் பன்மனத்திலுள்ள இந்து மத வழிபாட்டு தலமான பன்மன சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். இந்த கோயிலில் சரவணன் என்ற யானை கோவில் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனிடையில் சிறு வயது முதல் மணமகள் கிரீஷ்மா அந்த யானைக்கு உணவு வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் கிரீஷ்மாவும், ஜெய்ஷங்கரும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு யானை சரவணனிடம் நின்று போட்டோ ஷூட் செய்து உள்ளனர். அப்போது புது தம்பதியினரின் செயலால் கோபமடைந்த யானை தன் அருகே கிடந்த தென்னை மட்டையை தும்பிக்கையால் எடுத்து மணமக்கள் மீது வீசியது.
அந்த தென்னை மட்டை மணமகனின் தலையில் லேசாக உரசி சென்றது. இதனிடையில் யானை வீசியதில் மணமக்களின் தலைக்கு இடையில் தென்னை மட்டை பறந்து வருவதை புகைப்பட கலைஞர்கள் வீடியோவாக எடுத்து உள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. “நான் சிங்கிளாக இருக்கேன்.. என் முன்னே போட்டோ ஷூட்டா” என்ற பதிவுகளுடன் சமூகவலைதளவாசிகள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram