Categories
தேசிய செய்திகள்

“இந்தியா முழுதும் அனைவருக்கும் ஒரே திருமண வயது”…. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்….!!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து சமூகத்திலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது நம் நாட்டில் மதம் மற்றும் பாலினத்திற்கு ஏற்ப திருமண வயது மாறுபட்டுள்ளது. இதில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் பார்சி சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு திருமண வயது 18 ஆகவும் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் மட்டும் பெண்கள் பருவம் அடைந்தவுடன் அல்லது 15 வயதை அடைந்தவுடன் திருமணம் செய்து வைக்கலாம் என்று இருக்கிறது.

இதேபோன்று முஸ்லிம் சமூகத்தில் ஆண்களுக்கும் திருமண வயது நிர்ணயிக்கப்படவில்லை. எனவே சமுதாயத்தில் பாகுபாடு இன்றி அனைத்து சமூகத்தினருக்கும் 18 வயதை திருமண வயதாக நிர்ணயிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள் முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் திருமண வயது சட்டம் போக்சோ  சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாக இருக்கிறது என்று கூறினார்கள். மேலும் மனு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |